Shopping cart

Subtotal 0.00

View cartCheckout

Orders of $50 or more qualify for free shipping!

கடல்பாசி உரம்…கடல் செல்வம் தந்த வரம்…

  • Home
  • Uncategorized
  • கடல்பாசி உரம்…கடல் செல்வம் தந்த வரம்…

கடல்பாசி  உரம்…கடல் செல்வம் தந்த வரம்…

நம் இந்திய கடலோர மாநிலங்களுள், குஜராத்திற்கு அடுத்ததாக, நீண்ட கடற்கரையை  பெற்றது நம் தமிழகம்தான். வளம் கொழிக்கும் நம் வங்கக்கடலில் ஏராளமான செல்வங்கள் கொட்டி கிடக்கின்றன. முத்துச்சிப்பி, சங்கு, பவளப்பாரைகள் மற்றும் கடல்பாசி வளங்கள்.  இந்தியாவின் எந்த கடலலோரப்பகுதியையும்விட இங்குதான் மிக சிறப்பான வளங்கள் காணப்படுகிரது. அதிக சிறப்பு கொண்ட நம் கடல், உணவு உற்ப்பத்திக்கு பயன்படுத்த பல்வேறு அறிவியல் நுட்பங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், மிகவும் எளிதானதும், மகளிரும் பின்பற்ற கூடியதும், நல் வருமானத்தை தரக்கூடியதுமான கடல்பாசி வளர்ப்பு ஒரு முக்கியான தொழிலாக  தற்பொழுது பார்க்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப்பகுதி வாழ்மக்கள், பல்வேறு குழுக்களாக இனைந்து,  அரசு மற்றும் விஞ்ஞானிகளின் உதவிகளையும் பெற்று, கடல்பாசி வளர்ப்பை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர்.

 
சீவீட்ஸ் (Seaweeds) என்று அழைக்கப்படும் கண்ணுக்கு புலப்படக்கூடிய பெரும்பாசிகள் (Macro algae) கடலோரப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. கடல்பாசிகள், இதன் நிறத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக, பழுப்பு, சிகப்பு மற்றும் பச்சை நிறப்பாசிகளாக வகைப்படுத்தப்படுகிறது. கடல்பாசிகள் மக்களுக்கு  நேரடி உணவாகவும், பல்வேறு உணவுத்தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருலாகவும்,  கால்நடைகளுக்கு தீவனமாகவும், சிறந்த இயற்கை உரமாகவும்
பயன்படுகின்றன.    இவற்றுள் பழுப்பு மற்றும் சிகப்பு நிறப்பாசிகள் இயற்கை உரங்களாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகக்கடல்களில் இருந்து ஆண்டுலதோறும் ஏறத்தாழ 8.0  மில்லியன் டன் கடல்பாசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதிலிருந்து அல்ஜின்(Algin), அகார்(Agar), கராகினன் (carrageenan) ஆகிய மிக முக்கியமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இயற்கை உரங்களாக… கடல்பாசிகள்…

கடல்பாசிகள் ஏராளமான தாதுப்பொருட்களையும், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் நுண்னூட்டச்சத்து குறைபாடுள்ள வைகளாக கானப்படுகின்றன. கடல்பாசிகளில் அனைத்து நுண்ணூட்ட சத்துக்களும் ஒருங்கே கானப்படுவதால் இதை பயிர்களுக்கு அளிப்பதன் மூலம் சிறந்த மகசூலைப் பெறலாம். மேலும் இதில் பயிர்வளர்ச்சி ஊக்கிகளான ஆக்ஸின்(Auxin), சைட்டோகைனின்(Cytokinin) மற்றும் ஜிப்ரளிக் அமிலம் (Gibbrelelic acid) இருப்பதால் வேர்வளர்ச்சி, தண்டு வளர்ச்சியை நெறிபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சுமார்30 சதவிகிதம் வரை மகசூலையும் அதிகம் கொடுக்கின்றது. கடல்பாசி உரம் அளிக்கப்பட்ட வேளாண் விலை பொருட்கள், பளபளப்பாகவும், தரமாகவும் இருப்பதால் சந்தையில் முதல் இடத்தை பிடிக்கின்றன. மேலும் கடல்பாசிகள் விளை நிலங்களுக்கு இடுவதன் மூலம் சுற்றுசூழல், மண்வளம் மற்றும் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. இரசாயன உரங்களை விட மிகக்குறைவாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருப்பதால் விவசாயிகள் மத்தியில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை இந்த கடல்பாசிகள் பெற்றுள்ளது.

முணைவர். பாபு சாரங்கம்.
கடல்பாசி ஆராய்ச்சியாளர்.
மகதி பயேடெக்.
9894976617

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *